Monday, November 13, 2017

மல்லர்கள்



ஜெ

ஒருகடிதத்தில் பெருந்தன்மை பற்றி எழுதியிருந்தது. வெண்முரசு முழுக்க வந்துகொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான பெருந்தன்மை உண்டு. அது மல்லர்களின் மனநிலை. அவர்கள் எப்போதுமே இன்னொரு மல்லனை உடலுடன் உடல் என ஒரு வகையான அன்புடன் மட்டும்தான் அணுகுகிறார்கள். மல்லர்களை பார்த்ததுமே மகிழ்ச்சி அடைகிறார்கள். நாம் ஒருமுறை தோள்கோக்கவேண்டும் என்கிறார்கள். கதாயுத்தம் பயில அழைக்கிறார்கள். அதேபோல மல்லர்களுக்கு மல்லர்கள் அல்லாதவர்கள் ஒரு பொருட்டாகத்தெரிவதுமில்லை. அவர்களை ஏளனத்துடன் மட்டுமே அணுகுகிறார்கள். இந்த மனநிலை ஆச்சரியமானது. இதில் நாடு எதிர்ப்பு எதுவுமே ஒருபொருட்டாக இல்லை. மற்போரில் கொன்றால்கூட எதிரிமேல் பெரும் மதுப்பு கொண்டிருக்கிறார்கள்.கொன்றபின்னர் துக்கமும் அடைகிறார்கள்


மகாதேவன்