Saturday, November 11, 2017

முகங்கள்



வெண்முரசின் முக்கியமான புனைவுச்சிறப்புகளில் ஒன்று வெறும் பெயர்களாக மட்டுமே மகாபாரதத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் விரிவான குணச்சித்திரங்களாக காட்டுவது. விசித்திரவீரியன், சித்ராங்கதன் என்று ஆரம்பித்து இப்போது நான்காம் தலைமுறையில் உபபாண்டவர்கள் வரை அந்தச்சித்தரிப்பு விரிவாக வருகிறது. உண்மையில் அபிமன்யூவின் கதாபாத்திரம்கூட மகாபாரதத்தில் போரின்போதுதான் வருகிறது. உபபாண்டவர்கள் அனைவரும் அவர்களின் தந்தையரின் எக்ஸ்டென்ஷன் போல் இருக்கிறார்கள். சுருதசோமன், சர்வதன் என்று இரண்டு பீமன்களை மீண்டும் பார்ப்பது அற்புதமான அனுபவம்


செந்தில்