Friday, December 1, 2017

தந்தை



ஜெ

பிரத்யும்னன் கண்ணனைப்பற்றி ஓரளவு அறிந்திருக்கிறான். ஆனால் அவனால் அவன் தந்தையை அமானுடனாகப் பார்க்கமுடியவில்லை. பார்த்தால் அவனுக்கு தந்தை இல்லாமலாவார். அது தந்தையின் இறப்புக்குச் சமானமானதுதான். ஆகவே முடிந்தவரை அதை தவிர்க்கநினைக்கிறான்.

அவனுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு அவனுடைய அந்த நீண்ட உரையாடலில் வெளித்தெரிகிறது, அது ஆச்சரியமானது. பெரிய தந்தையர் வேண்டுமென்றே தங்கள் ஆகிருதியை மைந்தரிடமிருந்து மறைத்துக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தக்கோணத்தில் இதுவரை நான் பார்த்ததே கிடையாது

பிரத்யும்னன் சொல்லும் வரி முக்கியமானது. மிகப்பெரிய பாலைவனங்களில் கார் ஓட்டினால் எத்தனை ஓட்டினாலும் தூரம் குறையாது. அதைப்போன்ற அனுபவம்தான் அது. நான் வளைகுடாவில் இதை அறிந்திருக்கிறேன்


நாராயண்