Tuesday, December 19, 2017

தாமரைமலர்



ஜெ

குருஷேத்ரத்தை தாமரைமலர் என்று வர்ணிக்கும் ஒரு சுலோகம் உண்டு. படைகள் எல்லாம் இதழ்கள். கிருஷ்ணன் அதன் நடுவே அமர்ந்த வண்டு என்று. எங்கே வாசித்தேன் என நினைவில் இல்லை. தேடி எடுத்துத் தருகிறேன். வெண்முரசை இப்போது வாசித்தபோது அந்த புண்டரீகைத்தீர்த்தம் அப்படித்தான் தோன்றியது. செந்நிற இதழ்களுடன் மொத்த குருஷேத்ரமே ஒரு தாமரைபோல அதைச்சூழ்ந்து மலந்திருக்கிறது என்று தோன்றியது. வர்ணனைகள் வழியாகவே ஒரு பெரிய மன எழுச்சி உண்டாகியது. ஒரு மௌனநிலையை அடைந்தேன். குருஷேத்ரம் காத்திருக்கிறது என்றுதான் இந்த அத்தியாயத்தின் பொருள். ஆனால் அது முதற்கனலிலேயே வந்துவிட்டது என்பதும் ஞாபகம் வந்தது.


மகாதேவன்