Sunday, December 3, 2017

வடிவம்



அன்புள்ள ஜெயமோகன்

வெண்முரசு நாவல்கள் வந்துகொண்டிருக்கும்போது இதென்ன இங்கெல்லாம் செல்கின்றதே, இந்தக்கதை இங்கே எதற்கு, வடிவமே இல்லையே என்றெல்லாம் தோன்றும். ஆனால் முடியும்போது முதல் வரியிலிருந்து மிகச்சரியான ஒரு வடிவத்துடன் அமைந்திருப்பதைக் காணமுடியும். நான் நீங்கள் இதை ஒரு அரைப்பிரக்ஞ்ஞை நிலையிலேயே அடைகிறீர்கள் என நினைக்கிறேன்.  

அதாவது ஒரு மையமான கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள். அதை தேடித்தேடி அலைந்து அந்தக்கேள்விக்கு இன்னொரு கேள்வியையோ ஒரு தொகுப்பையோ பதிலையோ சொல்லி முடிக்கிறீர்கள். சரியான விடை வந்துவிடுகிறது. எழுதழலின் எழுகின்ற தழல் கிருஷ்ணன். அதுதான் உங்கள் எண்ணம் என நினைக்கிறேன். கிருஷ்ணன் ஏன் இருட்டில் விழுந்தான். ஏன் எழுந்தான். எழுந்தபோது அவனைச்சூழ்ந்திருந்தவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள். இதெல்லாம் தான் கதை.

ஆனால் இதை நீங்களேகூட எழுதி எழுதித்தான் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். கச்சிதமான ஒரு நாவலாக இருந்தது. ஒருபக்கம் கிருஷ்ணனின் எழுச்சி. மறுபக்கம் அதைப்பார்க்கும் இளையபாண்டவர்களின் கண்கள். இரு சரடும் முழுமையாக வந்துவிட்டிருக்கிறது


சாரங்கன்