Friday, January 19, 2018

குலப்பெருமை



ஒருவர் ஏன் தன் குலப்பெருமையை  தன் சுயஅடையாளமாக  முன்வைக்கிறார் என்பதற்கு இரு காரணங்களை வெண்முரசில்  சமீப அத்தியாயங்களில் அறிந்தேன் ,
முதல் பரப்பில் தெரியும் ஒன்று , வேறெந்த வாய்ப்பும் இல்லாத போது தன் இருப்பை தெரிவித்து கொள்ள என , பிந்துமதி  கரேணுமதி செய்வது இது .
இரண்டாவது காரணம்  இன்னும்  ஆழமானது , அவர்கள் குல பெருமையை   கருவியாக(tool )  கொள்கின்றனர்,   அதாவது வேறெந்த வழியும்  இல்லாமலாகிவிடும்  பொழுது  கட்ட கடைசியான  கருவிகளாக இந்த குலப்பெருமையை உபயோகிக்கின்றனர்  , உண்மையில் சேதி  நாட்டிலிருந்து இந்த பெண்கள்  எடுத்து வந்திருந்தது  இதுதான் , இவர்களின் அன்னைகளும்  தான் புகுந்த  வீட்டில் வைத்திருந்த(கலிங்க ) கருவிகளும்  இதுதான்  .


இன்னொரு இடம் அவையில்  சகுனி  சொல்லும் இடம் , 'தான் பாலை நிலத்தவன்  , தன்னால் பின் காலெடுத்து  வைக்க முடியாது' என சொல்லும் இடம் ,  இது ஒருவகையான தன்னியல்பு இது என்பதை விட தன் விருப்பத்தை நிறைவேற்ற  இந்த இயல்பினை கைக்கொள்கின்றனர்  என்பதே சரியாக இருக்கும் என தோன்றுகிறது .
அதாவது குல பெருமை என்பது ஒரு கற்பிதம்  என  தோன்றுகிறது .
.........
கரேணுபதியில் தெரிந்த நூல் பிரித்த  இயல்பு கண்டு சற்று திடுக்கிட்டேன்  , என் அப்பாவிடம்  உளஇயல்பை வெளிக்காட்டும்  ஒரு புறஇயல்பு உண்டு , ஒரு சமயம் என்னையறியாமல்  நானே அதை செய்து கொண்டு இருப்பதை , அதன் ஆரம்பத்தை  கண்டு திடுக்கிட்டேன் , வலுக்கட்டாயமாக அப்படி செய்ய கூடாது என எண்ணி அதிலிருந்து என்னை  விலக்கினேன் :)


கரேணுபதியில் அவளது  மூதாதைஅன்னை குடி கொண்டிருக்கிறாள்  என எண்ணினேன்  , இதில் இன்னொரு சுவாரஸ்யம் இந்த நூல் பிரிக்கும் இயல்பு சுனிதைய மகளான  பிந்துமதியில் இல்லாமல் அவள் தங்கை சுனந்தை மகளில் இருப்பது , தங்கையின் புற இயல்பில் ஒரு துளி கூட  அக்காவின்  நடத்தையின்  பாதிப்பு ( துக்கம் ) இல்லை , ஆனால் உள்ஆழம் முழுதும் அக்காவின் பாதிப்புதான்  , அதுதான் கரேணுபதியில் வெளிப்படுகிறது , அல்லது மூதன்னை  இவளை கிணறு தோண்ட  தோதான  இடம் என நினைத்து   தேர்ந்தெடுத்தாள் , அந்த கிணற்று நீர் வழியாக தன்னை காண ..


ராதாகிருஷ்ணன்