Wednesday, January 3, 2018

காந்தாரியின் இயல்பு



ஜெ

காந்தாரி தொடக்கம் முதலே குந்திக்கு நேர் எதிரானவளாகக் காட்டப்படுகிறாள். குந்தி ஆங்காரம் கொண்டவள். ஆசை கொண்டவள். அலைந்துகொண்டே இருக்கிறாள். மெலிய உடல்கொண்டவள். அவள் மேய்ச்சல்நிலத்து யாதவப்பெண். காந்தாரி மாறாக எங்குமே செல்வதில்லை. குண்டான பெருந்தாய். எதிலுமே ஆசையும் பற்றும் இல்லாமலிருக்கிறாள். உடனுக்குடனே மனதை கசடுகளில்லாமல் அமைத்துக்கொள்கிறாள். தான் பேரன்னையரின் வடிவமாக இருப்பவள் என்று அறிந்திருக்கிறாள்.

அவளிடம் எஞ்சும் ஒரு சிறிய காழ்ப்பு என்பது அவளுக்கு பிரகதியிடமிருக்கும் கோபம். அல்லது ஆற்றாமை. அதையும் அவள் தீர்த்துக்கொள்ளும் இடம் மிக உணர்ச்சிகரமானது. பிரகதியிடம் உள்ளூர அவளுக்குப்பெரிய கோபமேதுமில்லை. ஆகவேதான் யுயுத்சுவை அவள் முன்னாடியே ஏற்றுக்கொண்டிருக்கிறாள். இந்நாவலில் காந்தாரி நீண்ட இடைவெளிக்குப்பின் பெரிய தோற்றத்துடன் எழுந்து வருகிறாள்.


ஜெயராமன்