Sunday, January 21, 2018

கிருஷ்ணனின் விருப்பம்



அன்புள்ள ஜெ ,


முக்கியமானதை சொல்லாமல் விட்டு விட்டேன் , கிருஷ்ணன் அஸ்தினபுரிக்கு  சென்றது  அரசனாக  இல்லாமல் . ஒருவன் அரச அந்தஸ்து இழந்தவனெனில்  அவனை மக்கள் எங்கனம்  காணுவார்கள்  என்பதை சொல்லவுமே, கிருஷ்ணர் மக்கள் தன்னை எதிர்கொண்ட  விதத்தை பாண்டவர்களிடம்  எடுத்துரைக்கிறார்  .

இன்னொன்று கிருஷ்ணர் தனது அரச  அந்தஸ்த்தை  விட்டது , பாண்டவர்களுக்கு இணையாக ஆகும் பொருட்டு , நம்மை விட ஒருவர் மேல் இடத்தில் இருப்பின் , அவர் நம் எவ்வளவு மீது அன்பு கொண்டாலும் அவருடன்  ஒன்றுவது மனதளவில்  கடினம் . கிருஷ்ணன் தனது அரச அந்தஸ்தை  விடுவதன்  வழியாக , அரச அந்தஸ்து இல்லாத பாண்டவர்களிடம் இணக்கமாவது  எளிது  .
அன்பு ,உறவு , குரு அந்தஸ்து  எல்லாமும் இருந்தாலும் கூட படிநிலைகளில்  ஏற்றத்தாழ்வு  இருப்பெனில் அது மனதை கண்டிப்பாக தொந்தரவு செய்யும்  , இந்த இயல்புதான் ஒருவரை மேல் நகர்த்துவது  . 


கிருஷ்ணனின் விருப்பம் தன் சார்ந்ததல்ல  , தன் நோக்கம் சார்ந்தது , எனவே தன் நோக்கம் சார்ந்து தன் நிலையை விட்டு கொடுக்கிறார் 

ராதா கிருஷ்ணன்