Monday, January 15, 2018

வெறுப்பு



ஜெ

வெண்முரசின் அத்தியாயங்கள் பரிதாபத்தையும் கசப்பையும்தான் உண்டுபண்ணுகின்றன. பெரியோர்களும் தந்தையர்களும் கெஞ்சுகிறார்கள். திரும்பத்திரும்ப நல்லுரை சொல்கிறார்கள். ஆனால் ஒரு சமூகம் தற்கொலைசெய்துகொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டால் அதைநோக்கித்தான் சென்றுகொண்டே இருக்கும் என நினைக்கிறேன். இன்றைக்கு தமிழக அரசியிலிலே பலர் பேசும் வெறிபிடித்த பேச்சுக்களைக் கேட்கும்போது அதுதான் தோன்றுகிறது.

என் தாய்மாமா எண்பதுகளில் பஞ்சாபிலே வேலைபார்த்தவர். எப்படி சரசரவென்று அந்த வெறுப்பு தீபற்ற்க்கொள்வதுபோல மேலேறியது என்று சொல்லும்போது பிரமிப்பாகவே இருக்கும். மக்களுக்கு இந்த தீயை தன் கூரைமேல் பற்றவைத்துக்கொள்வதில் பெரிய ஆர்வமிருக்கிறது என நினைக்கிறேன்

எனக்கு திருதராஷ்டிரர் கெஞ்சியதுகூட பெரிதாகப்படவில்லை. விதுரர் கண்கலங்க சொல்ல்லும் இடம்தான் மனசை பதறவைத்தது. காலந்தோறும் இப்படித்தான் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது இல்லையா? போர் முதிரும் அக்காலகட்டத்தில் மக்கள் தங்கள் கனவுள்ளங்களில் நூறுநூறு முறை களம்கண்டு கொன்று குருதியாடி களித்திருப்பார்கள். பெருவிழைவு கொண்டு சூறைகொண்டாடியிருப்பார்கள். அத்தனை கீழ்மைகளும் விடுதலைகொண்ட களிப்பிலிருப்பார்கள்


ராகவேந்திரா