Tuesday, February 6, 2018

ஊழ்



ஜெ,

கிருஷ்ணனின் ஏந்திய கரங்களும், சுழன்று வணங்கி திரும்பி செல்வதுவும் இன்னமும் காட்சியாக இருக்கின்றன. “எனக்கு உகந்தது நிலமும் பொருளும் அல்ல, அரசே. அறமும் அளியும்தான். அவை இங்கு எழுமென்று எண்ணினேன். அவ்வெண்ணம் அவ்வண்ணமே எஞ்ச விடைகொள்கிறேன்."

அந்த எண்ணம் இன்னமும் எஞ்சி இருக்கிறது. போருக்குப் பிறகு அதுதான் நிகழப்போகிறது என்று அவையறிவித்து விட்டார். 

கனத்த சோர்வு மிஞ்சுகிறது. இது இப்படித்தான் போகும் என்று அறிவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதைக் காணும்போது எவ்வகையிலேனும் நம் நம்பிக்கைகள் பொய்த்துப் போக வேண்டும் என எண்ணுகிறோமோ என நினைக்கிறேன். அது நிகழ்வதேயில்லை. அந்த மாறா உறுதிதான் சோர்வு கொள்ள செய்கிறது.

பானுமதி அம்பையைப் போல் எழ வேண்டும் என விரும்பினேன். அவள் ஊர்வரைதான். தன் சத்தியத்திற்காக அம்பையை விலக்கிய பீஷ்மருக்கு அம்பையின் வஞ்சமும், தன் முனைப்பினால் தருக்கி நிற்கும் துரியோதனனுக்கு ஊர்வரையின் காதலும் என்பது என்ன வகை ஊழ் எனத் தெரியவில்லை.

ஏ.வி.மணிகண்டன்