Wednesday, March 21, 2018

ஞானமும் கர்மமும்



வேள்வியை ஒழிக்கும் வழி வேதமுடிபு. ஞானம் பேசுவதெல்லாம் கர்மத்தை அழிக்க. கர்மம் அழிந்தபின் ஞானம் தன்மூப்பு கொள்ளும். தான் சொன்னதே கர்மம் என்று வகுக்கும்” என்றார் குண்டர். 

இந்த வரியை மீண்டும் வாசித்தபோதுதான் கண்டுபிடித்தேன். அத்தனை செறிவான அத்தியாயத்தில் இப்படிப் பலவரிகள் விடுபட்டுவிடுகின்றன. உண்மையைச் சொன்னால்ன் இன்றுகூட இந்த வரியையே சடங்குவாதிகள் ஞானம் மீது குற்றச்சாட்டாகச் சொல்வார்கள். ஞானத்தின் பாதை காலப்போக்கில் ஆணவம் அடையும். பக்தியை மறுக்கும். ஞானம் கர்மத்தை அழிப்பதே ஒழிய உடனுறைவது அல்ல என்றுதான் சொல்வார்கள். அன்றுமுதல் இன்றுவரை இந்தக்குரல் மாறாமலேயே இருக்கிறது

சாரங்கன்