Friday, April 13, 2018

அறிவும் சாரமும்




ஜெ

இமைக்கணத்தின் இப்பகுதி Epistemology சார்ந்த கேள்விகளையே பெரும்பாலும் கையாள்கிறது. அறிவது எப்படி? அறிவதன் பிரச்சினைகள் என்ன? அறிவிலுள்ள மாயை என்ன? ஏன் அறியவேண்டும்? அறிவதனால் மகிழ்ச்சி உண்டா? ஐயமில்லாமல் அறியமுடியுமா? அறிவு என்பது சாத்தியம்தானா? தானற்ற அறிவு என ஒன்றுண்டா? திரும்பத்திரும்ப இக்கேள்விகளுக்கான விடையாகவே இதுவரை வந்துகொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் Ontology  சார்ந்த ஒரு விளக்கம். அது இவையனைத்துக்கும் விடையாக சொல்லப்படுகிறது. அறிவின் இயல்பு சார்ந்த கேள்விகள் வந்தபின்னர்தான் சாராம்சம் சார்ந்ததும் இருப்பியல் சார்ந்ததுமான கேள்விகளுக்கு இந்த விவாதம் செல்லும் என நினைக்கிறேன். கர்ணன் பீஷ்மர் சிகண்டி விதுரர் நால்வர் கேட்பதும் அறிவின் இயல்பைப்பற்றிய கேள்விகளைத்தான். ஒரு ஸ்பிரெட் ஷீட்டில் அந்தக்கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அறிவின் இயல்பு பற்றிய நிர்ணயங்களையும் தனியாக எடுத்து எழுதி வைத்தேன்

மனோகர்