Saturday, April 21, 2018

பிரம்மாண்டம்




ஜெ

வெண்முரசின் உச்சங்களில் ஒன்று இமைக்கணம். நேரடியாக வாசித்துப்போனால் புரியாது. ஒரு சில வரிகளுடன் சிந்திப்பது உறைந்துபோகும். ஆனால் இரண்டுபேர் அமர்ந்து எடுத்துப்பேசி விவாதித்தால் மிக எளிதாக தெளிவாகப்புரிகிறது. பொதுவாக தத்துவத்துக்கு விவாதிப்பதே உகந்த வழி என முன்னோர் ஏன் அமைத்தார்கள் என்பது புரிகிறது.

வியாசர் ஓண்டாலஜிக்கலான கேள்விகளுடன் வந்திருக்கிறார். வாழ்க்கையின் பொருள் என்ன என்பது மிக எளிய கேள்வி. அதற்கு மிக எளிமையான மொழியில் அதை முன்வைக்கிறார். நேரடியாகப் பதில் சொல்லும்படிச் சொல்கிறார். நான்குவகையான விடைகளை மகாபாரதம் உள்ளிட்ட ஞானநூல்கள் சொல்லும் என்றும் அந்நான்கும் வேண்டாம் என்ரும் சொல்கிறார்

நான்கு பதில்களையும் நான்கு வகையில் அவர் வகுத்துச் சொல்கிறார். ஒன்று இதை ஒரு சோதனைக்களம் என்கிறது. இன்னொன்று உலகை ஒரு பெரிய சுழற்சி என்கிறது. இன்னொன்று உலகம் பயிற்சிக்களம் என்கிறது. இன்னொன்று உலகம் மாயை, கனவு என்கிறது. நான்கும் நான்கு மதங்கள். இந்து பௌராணிக மரபு முதலி. இரண்டாவது ஜைன மரபு. மூன்றாவது பௌத்த மரபு. நான்காவது வேதாந்த மரபு. நான்கு மதங்களும் வேண்டம நேரடியாக பதில் சொல்லு என்கிறார்

கிருஷ்ணன் அவருக்கு இங்கிருக்கும் எதைவைத்தும் புரிந்துகொள்ளமுடியாத அந்த பிரம்மாண்டத்தைச் சொல்லிக்காட்டுகிறார் உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம் என்கிறார். கருணையே இல்லாத நம்மை அறியமுடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஒன்றை. மனசு உறைந்து எல்லா அர்த்தங்களையும் கைவிடும் உண்மையை கண்டு வியாசர் மீண்டு வருகிறார்

மகாதேவன்